அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள்.

மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான்.

இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் கே. பி. முனுசாமி போன்றோரெல்லாம் டெம்மி பீஸ்கள் .இவர்களை வைத்துக்கொண்டு, இவர் கட்சியும் நடத்த முடியாது. ஒரு எம்எல்ஏ கூட இவரால் ஜெயிக்க வைக்க முடியாது.

மேலும்,இப்போது இவர் சொல்கிறாரே ,47 எம்எல்ஏக்கள் ஜெயித்தது இவராலா? இவர் என்ன எம்.ஜி.ஆரா? அல்லது ஜெயலலிதாவா? ஜெயலலிதா இறந்ததால், இவருக்கு ஒரு யோகம்! முதலமைச்சராக அந்த சீட்டில் அமர்ந்து விட்டார்.

மேலும்,பிஜேபி இவரை வைத்து ஆட்சி செய்து கொண்டது. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. ஆனால், இப்போது இந்த 25 எம்எல்ஏக்களை இவர் தகுதி நீக்கம் செய்தால் ,கட்சி கண்டிப்பாக இரண்டாக உடைந்து விடும். உடைந்து விடுவது மட்டுமல்ல, அதிமுக கட்சியே, காணாமல் போய்விடும். இவரை வைத்து யாரும் அதிமுக என்று சொல்ல மாட்டார்கள். இவர் அந்த அளவுக்கு படிப்பறிவும் இல்லாதவர்.

மேலும்,இவர் எதை செய்ய வேண்டும் என்றாலும் ,யாரையாவது ஒருவரை வைத்துக் கொண்டுதான் ஆலோசனை கேட்டு, செய்ய வேண்டிய நிலைமை இவருக்கு உண்டு.

ஆனால், சி.வி. சண்முகத்திற்கு அந்த நிலைமை இல்லை. அவர் ஒரு வழக்கறிஞர். அவருக்கு அரசியல் தெரியும். மேலும், இவர் சொல்வது மட்டுமே வேதவாக்காக கட்சியினர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல். இந்த அரசியல் யார் செய்வார்கள்? என்றால், ஜெயலலிதா மட்டுமே செய்து வந்தார்.

அதை இவர் கையில் எடுத்தால் அவருக்கும், இவருக்கும், உள்ள அரசியல் தகுதி, வித்தியாசம் கூட தெரியாதவர். இன்று அந்த கட்சியை மிகவும் அடிமட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

தவிர,,இவர்கள் விஜய்க்கு ஆதரவளித்து, கட்சியும் காப்பாற்றலாம் . மக்களிடம் கட்சியின் செல்வாக்கும் நிலை நிறுத்தலாம் என்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ் .பி. வேலு மணியின் அரசியல் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கு தொடர்ந்து முட்டு ,கட்டை போட்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. காரணம் நான் தான் முதலமைச்சர், ஜோசியர்கள், சாமியார்கள், சொல்லி விட்டார்கள். பொறுமையாக இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்.

இங்கே தலைக்கு மேலே, வெள்ளம் போய்க் கொண்டிருந்தால், ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? அந்த நிலையில் அதிமுக இருக்கிறது. 170 தொகுதிகளில் 47 தொகுதியை ஜெயித்து விட்டு பெரிய வெற்றி என்று ஓ எஸ் மணியன் பேசுவது போல, இவரும் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அக்கட்சியினர் .

மேலும்,இது எல்லாம் அரசியல் தெரியாதவர்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம். தெரிந்தவர்கள் எப்படி கூடவே இருந்து இதை ஏற்றுக் கொள்வார்கள்? தவிர,சொன்னாலும் இவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அதனால், அவர்கள் விஜய்க்கு ஆதரவாக இந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருப்பது மக்கள் அதை வரவேற்றுள்ளனர்.

மேலும்,இவர்கள் என்ன சொல்கிறார்கள் ?இவர்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு சென்று விட்டார்கள். ஏன்? இவர் கூட எனக்கு துணை முதல்வர் கொடுங்கள் நானும் வருகிறேன் என்று கேட்டதாக தகவல்.

இப்படிப்பட்ட இந்த போட்டியில் அதிமுக மக்களிடையே செல்வாக்கும், வலிமையும், இழந்து விட்டது. மேலும்,எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி வெறியிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதில் ஜெயிக்கப் போவது 25 எம்எல்ஏ களா? எடப்பாடி பழனிசாமியா? பொதுக்குழு கூட்டினால், இவரை நிர்வாகிகள் நிச்சயம் தகுதி நீக்கம் செய்வார்கள்.

மேலும்,பெரும்பான்மையான நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி இடமும், சி.வி. சண்முகத்திடமும், தான் இருக்கிறார்கள் என்று அதிமுக வட்டார தகவல். இந்த கடுமையான கட்சியின் போட்டி சண்டைகள், பதவி போட்டிகள், நீதிமன்றம் அதை சரி செய்ய முடியுமா? அல்லது பொதுக்குழு சரி செய்ய முடியுமா? அதிமுகவின் எதிர்காலம்….????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *