
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.
இதில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் களும் உள்ளனர். பத்திரிக்கையை மதிப்பீடு செய்யக்கூடிய தகுதி ,செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலருக்கு இருக்க வேண்டும். நான் எத்தனையோ அதிகாரிகளை சந்தித்து பத்திரிகையை கொடுக்கும்போது ,அவர்களிடம் பல விஷயங்கள் பேசுவேன். அவர்களும் என்னை கேட்பார்கள் .அதற்கெல்லாம் பதில் சொல்வேன்.

ஏன் ?செய்தித்துறையில் கூட ,நான் எத்தனையோ அதிகாரிகள் ,என்னிடம் நன்றாக பேசி இருக்கிறார்கள் ஏன் இப்போதுள்ள இயக்குனர் வைத்தியநாதன் முதல் கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் வரை இந்த சப்ஜெக்ட் வேல்யூ என்ன? என்பதை புரிந்து இருக்கிறார்கள்.
நாம் சொல்லும் விஷயங்கள் அவர்கள் சரியா? தவறா? என்று பேசுவார்கள். நானும் அதற்கு விளக்கம் அளித்து இரக்கிறேன். ஆனால், இதற்குள் இருக்கிற அரசியல் என்ன? என்பது எனக்குத் தெரியும்.
அந்த அரசியலை வைத்துக்கொண்டு தான், அஸ்வின் போன்ற பி. ஆர். ஓ க்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், 35 ஆண்டு பத்திரிக்கை துறையில் பணியாற்றி இருக்கிறோம் என்றால், எதுவுமே தெரியாமல் பத்திரிக்கையை ஒருவர் நடத்த முடியாது. அதிலும் ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகளிடம் கொண்டு போய் கொடுத்தால் ,அதை படிக்கும் அளவில் அவர்கள் பார்ப்பார்கள். வாங்கி வைத்து விட மாட்டார்கள்.
அதேபோல் இணையதளத்திலும், நம்முடைய செய்திகளை அனுப்பியவுடன் அதில் ஏதோ விஷயம் இருக்கும் என்றுதான் படிப்பார்கள். இந்த அளவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் நோக்கத்தில் எந்த அளவுக்கு மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல முடியுமோ ,அந்த அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
இது தவிர ,நீதித்துறையிலும் எத்தனையோ வழக்கறிஞர்கள் நண்பர்கள் ஆக இருக்கிறார்கள். அவர்களும் நல்ல அபிப்பிராயம் தான் சொல்லி இருக்கிறார்கள். இதைவிட எனக்கு முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வயதுக்கு ,அவருடைய எளிமைக்கு, அவருடைய நேர்மைக்கு, நான் சிறியவனாக இருந்தாலும், அவரால் வாய் திறந்து பாராட்டப்பட்டுள்ளேன்.

அந்த அளவுக்கு இந்தத் துறையில் எனது பணி! சமூக நலனுக்காக இருக்கும்போது, அதை தடுக்கும் நோக்கத்தில், எமது பத்திரிக்கையை கேவலப்படுத்தும், நோக்கத்தில், பத்திரிகை என்றால்! அர்த்தம் தெரியாத ஒரு செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி, அதிகாரி என்று சொல்வதற்கு அர்த்தம் இல்லை. ஆனால், சீட்டு கிடைத்து விட்டது. அதற்கான தகுதி இல்லை.

இருப்பினும்,இவர் மீது நான் கொடுத்த எனது பத்திரிகைக்கான தேர்தல் அடையாள அட்டைக்கு கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு தடுத்து விட்டார். அது எவ்வளவு தவறான செயல். இது ஒரு பத்திரிக்கையை பற்றி தெரிந்த அதிகாரியாக இருந்தால், நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார்கள்.

மேலும்,அரசியல் கட்சியினர் செய்கின்ற வேலையை, ஒரு செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி செய்திருக்கிறார் அஸ்வின். அது மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நான் கேள்விப்பட்டவரை, பெரும்பாலும் எல்லா பத்திரிகைகளுக்கும் வாரம், மாதம் என்ற பாரபட்சம் இல்லாமல்,எல்லாவற்றிற்குமே இந்த தேர்தல் அடையாள அட்டை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும்,

இந்த அஸ்வின் எந்த அதிகார கர்வத்தில் ஆட்டம் போடுகிறார் ?என்று தெரியவில்லை. மேலும், இதேபோல் என்னுடன் நிருபராக பணியாற்றிய ஒருவரையும் ,இவர் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி பேசியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். இது எல்லாம் செய்தி துறை அதிகாரி செய்ய வேண்டிய வேலை அல்ல.மேலும்,

அவரும் தலைமைச் செயலகத்திற்கு புகார் அனுப்பி, கடிதத்தின் மூலம் இவர் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதனால், இவரை செய்தித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவது தான் நல்லது. செய்தித் தறையில் ஒரு பி ஆர் ஓ இருப்பதற்கான தகுதி இவரிடம் இருக்கிறதா? என்பதை இயக்குனரே ஆய்வு செய்யுங்கள்.எனவே, தகுதி இல்லாத ஒரு நபர் தான் அஸ்வின்.
மேலும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இ – மெயில் மூலம் அனுப்பப்பட்ட செய்தியின் புகார் அடிப்படையில்,இவரிடம் தேர்தல் ஆணையத்தின் மூலம் இவரிடம் அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், இன்னொரு முறை இது போன்ற தவறை பத்திரிக்கை துறையில் செய்யக்கூடாது.
மேலும், தகுதி இல்லாமல் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரம் கையில் கொடுத்து விட்டார்கள் என்று ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் இங்கே வேலை இருக்கக் கூடாது.

அதனால், இவரை, வேறு துறைக்கு மாற்றினால், நல்லது. பத்திரிக்கை பற்றி தெரியாதவர்களை செய்தித் துறையில் அதிகாரிகளாக நியமித்து, எங்களை எல்லாம் கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது. பத்திரிக்கை என்பது பல போராட்டங்களை சந்தித்து பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். தவிர, தேர்தல் அறிவித்த நாளிலிருந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் எவ்வளவு செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம். பத்திரிக்கையை பற்றி படித்திருந்தால் தானே, செய்தியின் அர்த்தம் தெரியும். பத்திரிகையின் அர்த்தம் தெரியும்.மேலும்,
Therefore, it would be better to transfer him to another department. We cannot accept appointing people who do not know about journalism as officers in the press department and making fools of all of us. Journalism is something we have been conducting while facing many struggles. Moreover, from the day the election was announced, our newspaper and website have published numerous news items on makkal adhikaram. Only if one has studied journalism will they understand the meaning of the news. They will understand the meaning of journalism. Furthermore,
500 கோடியில் பத்திரிக்கை ஆரம்பித்தாலும், அதன் நோக்கம் எதற்கு? என்று தெரியாத ஒருவரிடம் பத்திரிக்கை பற்றி பேசுவது வீணானது. அதற்கு தகுதியான ஒரு நபர் தான் அஸ்வின்.