தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? – பொதுமக்கள் .

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்திலே புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூபாய் 1200 கோடியில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான தலைமைச் செயலக புதிய கட்டிடம் அமைக்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு !மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது, மேலும்,தமிழக அரசு! ஏற்கனவே, குறிப்பிடத்தக்க கடன் சுமையை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. மறுபுறம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், […]

Continue Reading

உதயநிதி மகன் இன்பநதி !சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்ற போது, எதற்கு இந்த கத்தல்? இவர்கள் செய்திக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? இல்லை, கல்யாணத்துக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? சமூக நலன் பத்திரிகைகள்.

நாட்டில் செய்திக்கு அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருந்து வருகிறது. அதனால்தான், எது செய்தி? என்று கூட தெரியாமல் ,உதயநிதி மகன் இன்பநதி சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்றால் கூட ,அதற்கு முண்டியடித்து வீடியோ எடுப்பதும் ,போட்டோ எடுப்பதும், இந்த தொலைக்காட்சி பத்திரிகை நிருபர்களின் செயல் பத்திரிக்கை துறைக்கு எதிரானது. மேலும்,பத்திரிக்கைத்துறை அர்த்தம் தெரியாமல், அது விளம்பர துறையாக மாறிவிட்டதா? இந்த போலி செய்திகளை விளம்பரப் படுத்துவதற்கு தான், செய்தித்துறையில் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை […]

Continue Reading

ராகுல் காந்தி எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள். இந்த ஊடகப் பொய்களை நம்பி பிரதமர் மந்திரி ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறாரா?

இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி செத்துவிட்டது என்று தெரிவிக்கிறார். இது வன்மமான பேச்சு. இந்தியாவின் எதிரி கட்சியாக செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி! 2025-26 முழு ஆண்டுக்கான புதிய கணக்கீட்டில் Real GDP வளர்ச்சி 7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 முதல் காலாண்டில் அது 7.8% ஆக இருக்கும் என ஆர்.பி‌ஐ. மதிப்பீட்டில் […]

Continue Reading

சட்டமன்றத்தின் நிகழ்வுகள்! தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவார்களா? நீங்கள் விளம்பரம் தேடுவதற்கு சட்டமன்றமா? – சமூகநலன் பத்திரிகைகள் .

சட்டமன்ற உறுப்பினர்கள்! வாக்களித்த மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடைய உழைப்புக்கு, உண்மைக்கு, சட்டத்துக்கு, நீதிக்கு பயந்து ,மனசாட்சிக்கு பயந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் இனியாவது அப்படி பேசுவார்களா? தவிர,சட்டமன்றம் எப்படியும் பேசுவதற்கு சட்டமன்றம் அல்ல! உங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் சட்டமன்றம் அல்ல! மேலும், சட்டமன்றத்தின் கால நேரம் தமிழக மக்களுக்கு பயனுள்ள செய்திகளை கொடுப்பதாக இருக்க வேண்டும். மேலும்,அங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் பேச்சுக்களை பேசிக்கொண்டு, தேவையற்ற கருத்துக்களை பேசிக்கொண்டு ,கால நேரத்தை வீணடிப்பது தேவையற்றது. […]

Continue Reading

பெரிய கார்ப்பரேட் கடனாளிகளுக்கு வங்கிகள்சமரசம்! ஆனால், சாதாரண நடுத்தர மக்கள் வாங்கிய கடனுக்கு! வங்கிகள் Recovery Agent? ஆ — வங்கிகளின் நடைமுறை நியாயமா?

வங்கியின் நடைமுறை! பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் !ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு நியாயம்! இதை எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை. 75% கடனை செலுத்திய நடுத்தர மக்களின் வங்கி அந்த வாடிக்கையாளர்களிடம் மீதியை வசூலிக்க, கடுமை நடவடிக்கை ஏஜென்ட்களை வைத்து எடுக்கிறது. அதுவே, கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு வங்கிகள்!ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் claims-ல் OTS, Compromise Settlement — ஏன்? இந்த இரட்டை அணுகுமுறை? மக்கள் அதிகாரசமூக நலன் பத்திரிகையின் – சிறப்பு கட்டுரை. வங்கிகளில் கடன் வாங்கும் […]

Continue Reading

நாட்டில் புவி வெப்பமயமாதலை தடுப்பது உலக அளவில் முக்கியத்துவமானது. இருப்பினும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதற்காக ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? சமூக நலன் பத்திரிகைகள்.

நேபாளத்தில் நடந்த இயற்கை பேரிடர் இந்தியாவில் நடக்காமல் என்ன வழி ?என்பதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் கேள்வி? மட்டுமல்ல, சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வியும் அதுதான். மேலும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்கள் நலனில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு தளம். அதனால்தான், இதுவரை எத்தனையோ முறை கடந்த கால ஆட்சியிலும் ,நீரை அசுத்தப்படுத்துகிறார்கள் .அதாவது நீரில் நச்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுகிறது. அது பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக […]

Continue Reading

மக்களின் இறை நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா? இதுதான் உண்மையான பக்தியா?- கைலாஷ் பாதயாத்திரை சென்றவர்கள் .

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைலாஷ் யாத்திரை சென்ற போது ,நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில்,தமிழர்கள் பெரும்பான்மையினர் தப்பி பிழைத்து வந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்துள்ளது. இதில் அரசு என்ன செய்யணும் என்பதை அரசு செய்து விட்டது. ஆனால், இறைவழிபாடு என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மலை யேறுவதை, அதை எந்த தெய்வமும் சொல்லாது. அப்படி எதிர்பார்க்கவும் செய்யாது.மேலும்,அப்படி கையிலே பிடித்துக் கொண்டு, […]

Continue Reading

மனித வாழ்க்கைக்கு எதிராக இயற்கை! தன் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதா? அது எதனால்?

மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன . காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம். ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் […]

Continue Reading

சிறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களுக்கான அரசின் விளம்பரக் கொள்கையில்! திருத்தம் கோரும் சமூக நலன் பத்திரிகைகள் கோரிக்கை .

தமிழக அரசின் செய்தித்துறை !அரசு விளம்பரங்கள் வழங்குவதற்கான தகுதியில், இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் பிரதான அளவு கோலாகக் கொள்ளாமல், செய்தித் தரம், சமூகப் பங்களிப்பு மற்றும் பத்திரிகைச் செயல்பாட்டையும் இணைத்து மதிப் பிடக் கோரிக்கை. இது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் மற்றும் இணையதளத்தில் இதை வலியுறுத்தி வருகிறது.மேலும், சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், நீண்டகாலமாக மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு வருகின்றன. எனவே ,அரசு விளம்பரத் தகுதியை […]

Continue Reading